R.Maheshwary / 2023 ஜனவரி 04 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
கடந்த 25 நாட்களில் போதைப் பொருள்களுடன் சிவனொளிபாதமலைக்குச் சென்ற 149 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டிசெம்பர் 7ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பல்வேறு போதைப் பொருள்களுடன் சிவனொளிபாதமலைக்குச் சென்ற சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி விஜித அல்விஸின் ஆலோசனைக்கமைய, சிவனொளிபாதமலைக்கு வரும் வாகனங்கள் பல்வேறு இடங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் போதைப் பொருள்களுடன் வருபவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் பொலிஸ் மோப்ப நாய் பிரிவின் ஸ்டுவட்டும் பங்குகொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கு மேலதிகமாக ரயில் மூலம் ஹட்டன் ரயில் நிலையத்துக்கு வருகைத் தரும் யாத்திரிகர்கள் ரயில் நிலையத்தில் சோதனைக்குள்ளானதாகவும் இதன்போதும் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி விஜித அல்விஸ் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 20 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் இவர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
1 hours ago
7 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
16 Jan 2026