2025 மே 16, வெள்ளிக்கிழமை

சிவனொளிபாதமலைக்குச் சென்றவர் மாரடைப்பால் மரணம்

R.Maheshwary   / 2023 ஜனவரி 04 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

சிவனொளிபாதமலைக்கு யாத்திரைச் சென்ற நபர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் திங்கட்கிழமை (2) பதிவாகியுள்ளது.

கம்பஹா- இம்புல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான சனத் வீரசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.ஏ.பி.எஸ். வீரசேகர தெரிவித்துள்ளார்.

சிவனொளிபாதமலைக்கு ஏறிக்கொண்டிருந்த இவர், திடீர் சுகயீனமுற்றதாகவும் இதனையடுத்து அவர் மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .