R.Maheshwary / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
கடந்த இரண்டு வாரங்களாக சிவடினாளிபாதமலைக்குச் செல்லும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, அப்பிரதேசத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்துள்ளது.
இதற்கமைய, நல்லதண்ணி நகரில் இருந்து மலைக்கு செல்லும் பிரதான வீதி மற்றும் மலைப் பகுதியில் உள்ள வன பகுதிகளில் அதிக அளவில் பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன்கள் வீசப்பட்டுள்ளதாக அங்கு உள்ள பொது சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி அவற்றை முழுமையாக அப்புறப் படுத்த வேண்டும் என அவர் கூறினார்.
இவ்வாறு யாத்திரிகர்கள் பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன் கழிவுகளை ஆங்காங்கே வீசி விட்டுச் செல்வதால், அப் பகுதியில் பாரிய சுற்றாடல் மாசு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது என வன பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
12 minute ago
30 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
30 minute ago
5 hours ago