R.Maheshwary / 2022 டிசெம்பர் 26 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
மாத்தளை பிரதேசத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மாத்தளை மாவட்டத்தில் 53 குடும்பங்களைச் சேர்ந்த 263 பேர் இன்று (26) காலைவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என மாத்தளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சமிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, மண்மேடு சரிந்து விழுந்தமைக் காரணமாக உக்குவளை பிரதேச செயலகப் பிரிவின் 23 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேரும் மாத்தளை பிரதேச செயலகப் பிரிவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 146 பேரும் நாவுல பிரதேச செயலகப் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடொன்றும் முழுமையாக சேதமடைந்துள்ளது.
அனர்த்தங்களால் பதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கை மாத்தளை மாவட்ட அதிபர் தேஜானி திலகரத்னவின் ஆலோசனைக்கமைய பிரதேச செயலகப் பிரிவுகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.
49 minute ago
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
3 hours ago
9 hours ago