2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

சுக்கு நூறாகிய பொலிஸ் ஜீப்

Freelancer   / 2022 மார்ச் 19 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

நுவரெலியா - டயகம பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான பொலிஸ் ஜீப் வாகனம் ஒன்று நேற்று மாலை விபத்துக்குள்ளானதில் வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளதோடு, பொலிஸ் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டயகம பொலிஸ் நிலையத்துக்கு சொந்தமான ஜீப் வாகனம் வீதியிலிருந்து 15  அடி‌ உயரத்திலிருந்து கீழே பாய்ந்து குடைசாய்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

டயகம நகரத்திலிருந்து பொலிஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் போது குறித்த பொலிஸ் வாகனத்தில் சாரதியும் பொலிஸ் நிலைய அதிகாரியும் சென்றுள்ளனர். 

மேற்படி வாகனம் முழுமையாக சேதமடைந்துள்ளது. இதுவரை விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை டயகம போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X