2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சுயதொழில் வாய்ப்புக்காக ஒரு ஏக்கர் காணி

Freelancer   / 2022 நவம்பர் 11 , மு.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்
         
கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட வறிய குடும்பங்களின் சுயதொழில் வாய்ப்புக்காக ஒரு ஏக்கர் காணி பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த், மாதாந்த அமர்வில் உரையாற்றும் போது தெரிவித்தார். 

தலைவர் உட்பட 13 உறுப்பினர்கள் கலந்து கொண்ட அமர்வில் அவர் தொடர்ந்து பேசுகையில்,

கொட்டகலை பிரதேச சபை நிர்வாக எல்லைக்குள் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு உதவும் வகையில் அவர்களின் சுயதொழில் முயற்சிகளுக்காக காணியைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்துள்ளார்கள். 

அதற்கு அமைய, கொமர்ஷியல் பகுதியில் ஒரு ஏக்கர் காணியைப் பகிர்ந்தளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பத்திரிகைகளில் கேள்விப் பத்திரம் கோரப்படவுள்ளது.

காணியைப் பெற்றுக் கொள்ள விரும்புகின்றவர்கள், அதற்கான பணத்தை பிரதேச சபையில் வைப்பிலிட்டு, தாங்களாகவே கடைகளை நிர்மாணித்துக் கொள்ளலாம்.
 
அல்லது சபையின் ஊடாக கடைகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும். இதில் எந்தவிதமான அரசியல் தொழிற்சங்க பேதமும் இருக்காது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து காணித் துண்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .