2025 மே 15, வியாழக்கிழமை

சுயேட்சைக்குழு கட்டுப்பணம் செலுத்தியது

Freelancer   / 2023 ஜனவரி 13 , மு.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் கொட்டகலை பிரதேச சபைக்கு போட்டியிடுவதற்காக சுயேட்சைக்குழுவொன்று கட்டுப்பணம் செலுத்தியது.

சமூக செயற்பாட்டாளரும், அரசியல் ஆய்வாளருமான ராமன் செந்தூரன் தலைமையிலான குழுவினரே இவ்வாறு வியாழக்கிழமை (12) கட்டுப்பணம் செலுத்தினர்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஏனைய சபைகளிலும் தமது அணி சுயேச்சையாக களமிறங்கும் எனவும், அதற்கான கட்டுப்பணம் ஒரிரு நாட்களுக்குள் செலுத்தப்படும் எனவும் ராமன் செந்தூரன் கூறினார்.

மலையக அரசியல் வாதிகள், எமது மக்களை திட்டமிட்டஅடிப்படையில் ஏமாற்றிவருகின்றனர். இளைஞர்களையும் சந்தர்ப்பத்துக்காக பயன்படுத்திவருகின்றனர். எனவே, இந்நிலைமை
மாற வேண்டும். நாம் மாற்றியமைப்போம்.

சமூக மாற்றத்துக்கான பயணத்தை வெற்றிகரமாக ஆரம்பிக்கவே நாம் தேர்தலில்
போட்டியிடுகின்றோம். மக்கள் எமக்கு ஆசிவழங்குவார்கள் எனவும் செந்தூரன் நம்பிக்கை வெளியிட்டார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .