2025 மே 16, வெள்ளிக்கிழமை

சுற்றாடல் பாதிப்பை தடுப்பதற்கான யோசனைகளுக்கு தீர்வில்லை

R.Maheshwary   / 2023 ஜனவரி 03 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

மாத்தளை மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு  ஏற்படுவதைத் தடுப்பதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மாத்தளையிலுள்ள  சுற்றாடல் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

தமது அமைப்புகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு அமைய மாவட்டத்தில் உள்ள அனைத்து வனங்களையும் அரசாங்கம் பொறுப்பேற்று இருப்புப் படுத்துதல், நீர் ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கு கால்வாய்களை முறைப்படுத்தாமல் பயன்படுத்துவதை தடுத்தல், ஆழ்குழாய் கிணறுகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுத்தல், கழிவு பிரச்சினை முகாமைத்தவம் உள்ளிட்ட பல்வேறு யோசனைகள் தமது அமைப்புகளால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த முன்மொழிவுகள் மாவட்ட சுற்றாடல் குழுவிற்கும் ஏனைய சுற்றுச்சூழல் தொடர்பான முன்மொழிவுகளுக்கும் கொடுக்கப்பட்ட போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சுற்றாடல் அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .