R.Maheshwary / 2023 ஜனவரி 29 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
வெல்லவாய ரக்பிதாதகந்த புராதன ரஜமஹா விஹாரையை பார்வையிட வந்த பிரான்ஸ் நாட்டு பெண் உட்பட மூவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம்(28) முறைப்பாடு கிடைத்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.
பிரான்ஸைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த 21ஆம் திகதி, தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளதுடன், மிரிஸ்ஸ பகுதியிலுள்ள குறித்த விஹாரைக்குச் சென்று மீண்டும் வாகன தரிப்பிடத்திற்கு 27ஆம் திகதி வந்துள்ளனர்.
அப்போது வாகன நிறுத்துமிடத்தில் இருந்த சுற்றுலா வழிகாட்டி மற்றும் சாரதியுடன் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்ததாகவும் இதன்போது, அந்த இடத்தக்கு வருகைத் தந்த குறித்த விஹாரையின் பிக்கு ஒருவர், இங்கு புகை பிடிக்க வேண்டாம் என கூறியுள்ளார்.
இதன்போது அப்பெண், குறித்த பிக்குவின் முகத்தில் சிகரெட் புகையை ஊதியதாகவும் இதனையடுத்து அப்பெண்ணையும் அவர்களின் வாகன சாரதியையும் பிக்கு தாக்கியுள்ளார்.
அத்துடன் அப்பெண்ணின் கணவரும் பிக்குவால் தாக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் குறித்த பெண், வெல்லவாய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago