2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

சுவசெரிய திட்டம் ’இலங்கை - இந்திய உறவுப்பாலம்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 27 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கமல்

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் “சுவ செரிய” அம்பியூலன்ஸ் சேவைத் திட்டம், இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவுப்பாலம் என்று, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இந்திய நிதி உதவியில், இலங்கையில் மேற்கொள்ளப்படும் இந்த அம்பியூலன்ஸ் சேவையால், பெருந்தோட்டத் தொழிலாளர்களே, பெரிதும் பயனடைவர் என்று தெரிவித்த அவர், அதனால் இந்தத் திட்டம், இரு நாடுகளுக்குமிடையிலான உறவுப்பாலமாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்தாண்டு, மலையத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இத்திட்டம் இலங்கையில் ஆரம்பித்து வைக்கப்படும் என கூறிச் சென்றமையைச் சுட்டிக்காட்டிய அவர், அந்தத் தருணத்தில், இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, தன்னை மறந்து கைதட்டினாரெனவும் குறிப்பிட்டார்.

இவ்வாறான ஒரு திட்டம், மலையக மக்களுக்குக் கிடைப்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது எனவும், வடிவேல் சுரேஷ் எம்.பி தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் ஆரம்பிக்கப்படும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு, நீண்ட காலம் எடுக்கும் என்று தெரிவித்த அவர், ஆனாலும் அந்தத் திட்டங்கள் நிலையானவையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X