Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
R.Maheshwary / 2022 ஜூலை 03 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
சுசவெரிய அவசர அம்பியூலன்ஸ் வண்டியொன்றும் வானொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
நாவலப்பிட்டி- கினிகத்தேனை வீதியின் மீபிட்டிய பகுதியில் இன்று (3) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கினிகத்தேனை பகுதியிலிருந்து நோயாளி ஒருவரை நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு ஏற்றி வந்த சுவசெரிய அம்பியூலன்ஸ் வண்டி, மீண்டும் கினிகத்தேனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே, கினிகத்தேனையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி சென்றுக் கொண்டிருந்த வானுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
எனினும் இதன்போது எவருக்கு எவ்வித காயங்களும் ஏற்படாத போதிலும் இரண்டு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இதேவேளை, வானின் சாரதிக்கு அனுமதிப்பத்திரம் இல்லை என தெரிவித்துள்ள பொலிஸார், வான் சாரதியின் கவனயீனமே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.
அத்துடன் வானின் சாரதி நாவலப்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .