R.Maheshwary / 2022 மே 09 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சூரியகாந்தி தோட்ட குடியிருப்பிலிருந்து 71 வயது பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நான்கு பிள்ளைகளின் தாயான 71 வயதான சிவமணியம்மாவே தன்னுயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண், சுகவீனமுற்றிருந்த நிலையில், தனது இளைய மகளின் அரவணைப்பில் வசித்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் நேற்று காலை இவர், இராகலை பிரதேச வைத்தியசாலைக்கு சென்று மருந்து எடுத்து வந்துள்ளதுடன், இரவு உணவுக்குப் பின்னர் நித்திரைக்குச் சென்றதாகவும் அவரது மகள் தெரிவித்துள்ளார்.
இன்று (9) காலை ஏழு மணிவரை தாய் நித்திரையிலிருந்து எழும்பாததை அவதானித்த மகள், தாயின் அறையை திறக்க முற்பட்ட போது, கதவு உள்பக்கமாக மூடப்பட்டிருந்ததாகவும் பின் அயலவர்களின் உதவியுடன் அறையை திறந்து பார்த்த போது, தாய் தன்னுயிரை மாய்த்துக் கொண்டிருந்த்தாகவும் மகள் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இராகலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago