2025 மே 05, திங்கட்கிழமை

சென்ரயாஸ் தோட்டத்தில் பதற்றம்

Gavitha   / 2020 நவம்பர் 16 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.யோகேசன்

ஹட்டன் வெலிஒயா பிரதேசத்தின் புதுகாடு சென்ரயாஸ் தோட்ட பகுதியில், நேற்று (15), இந்தெரியாத நபர்கள் தோட்டத்துக்குள் புகுந்தமையால், அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது.

வெலிஒயா பிரதேசத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ச்சியாக மக்கள் பதற்றத்தில் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வெலிஒயா தோட்ட பிரதேசங்களான புதுக்காடு, தண்டுக்கலா, மந்திதோட்டம் ஆகிய தோட்டங்களுக்கு இனந்தெரியாத நபர்கள் உட்புகுந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ச்சியாக இப்பிரதேசத்தில் இனந்தெரியாத நபர்கள் பிரதேசத்துக்குள உட்புகுவதாலும், கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாலும் மக்கள் அச்சத்திலே இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில், தீபாவளிக்கு மறு நாளாகிய நேற்றைய முன்தினம், வெலிஒயா சென்ரயாஸ் தோட்டத்துக்குள் எட்டுக்கும் மேற்பட்ட இனந்தெரியாத நபர்கள் உட்புகுந்தமையால், அப்பிரதேசத்தில் பதற்றம் நிலவியது. குறித்த தோட்ட இளைஞர்கள், இனந்தெரியாதவர்களை மடக்கிப் பிடிக்க முயற்சித்த போதும் பயனளிக்கவில்லை.

சம்பவம் தொடர்பில்  ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முடுக்கி விட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X