2025 ஜூலை 02, புதன்கிழமை

செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலளருக்கு இடையூறு

Editorial   / 2017 நவம்பர் 09 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

தலவாக்கலை லிந்துலை பகுதியில், இரும்புக் கம்பிகளை ஏற்றிச்சென்ற லொறி விபத்துக்குள்ளான சம்பவசம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற  ஊடகவியலாளருக்கு, இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தலவாக்கலை - நுவரெலியா பிரதான வீதி, லிந்துலை பகுதியில், புதன்கிழமை மாலை இரும்புக்கம்பிளை ஏற்றி சென்ற லொறி, பாதையிலே குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

இவ்விபத்தால், போக்குவரத்து தடைப்பட்டதுடன், சில மணித்தியாலங்கள் ஒருவழி போக்குவரத்து இடம்பெற்றது.

இச்சம்பவத்தை செய்தியாக்குவதற்குச் சென்ற பிராந்திய ஊடகவியலாளரை, லொறியின் சாரதி தகாதவார்த்தை பிரயோகத்தை மேற்கொண்டு திட்டியதுடன், ஊடகவியலாளரின் பணிக்கும் இடையூறு விளைவித்துள்ளார்.

ஊடகவியலாளருக்கு இடையூறு விளைவித்த நபர் தொடர்பில், லிந்துலை பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .