2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

செவ்வாய்க்கிழமை வருகிறது பட்ஜெட்

Freelancer   / 2022 நவம்பர் 10 , பி.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

அக்கரப்பத்தனை பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் (பட்ஜெட்) எதிர்வரும் 15 ஆம் திகதியன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தவிசாளர் இராமன் கோபாலகிருஸ்ணன் இந்த வரவு-செலவுத் திட்ட அறிக்கையை முதன் முறையாக சபையில் சமர்பிக்கவுள்ளார்.

கடந்த நான்கரை ஆண்டுகளாக இப்பிரதேச சபையின் தவிசாளராக பதவிவகித்த எஸ்.கதிர்செல்வன், பதவி விலகியதை தொடர்ந்து அவரின் வெற்றிடத்துக்கே, இராமன் கோபாலகிருஸ்ணன் நியமிக்கப்பட்டார்.

நுவரெலியா மாவட்டத்தின் ஏனைய உள்ளூராட்சி மன்ற சபைகளுக்கு முன் மாதிரியாக அக்கரப்பத்தனை பிரதேச சபையின் எஞ்சியுள்ள காலப்பகுதியில அபிவிருத்திகளை முன்னெடுக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

இருப்பினும் அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குரிய பிரதான நகரங்களாக டயகம, அக்கரப்பத்தனை, மன்றாசி, மெராயா, மற்றும், லிந்துலை, இரான்வத்த, நாகசேனை ஆகியன காணப்படுகின்றன.

இருந்த போதிலும் சபை ஊடாக நகர் மற்றும் தோட்டப்பகுதி அபிவிருத்திக்காக போதிய அளவு வருவாயை ஈட்டிக்கொள்ள முடியாதுள்ள நிலைமையை மாற்றியமைக்கும் வகையில் இந்த வரவு-செலவுத் திட்டம் அமையுமென தவிசாளர் நம்பிக்கை தெரிவித்தார். (R)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .