Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 06 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்துக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணி நேற்று (5) கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், நாடளாவிய ரீதியிலிருந்து பெருந்திரளான மக்கள் பங்கேற்றிருந்த போதிலும், மலையகத்திலிருந்து சொற்ப அளவினரே பங்கேற்றுள்ளனர் என்று தெரிவருகிறது.
எனினும், பதுளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலிருந்து கணிசமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என, அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் குறிப்பிட்டன.
கொழும்பு நகரின் வீதிகள் மனிதத் தலைகளால் நிரம்பின
ஒன்றிணைந்த எதிரணியால் கொழும்பை மய்யப்படுத்தி, அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும், பெருந்திரளான மக்கள் பங்கேற்றிருந்தனர்.
சாதாரண நாள்களில், காலை வேளைகளில் கடும் வாகன நெரிசலாக காணப்படும் முக்கிய வீதிகளும் இடங்களும் கூட, நேற்றையதினம் வெறிச்சோடிக் காணப்பட்டன. எனினும், மாலை வேளை, மனிதத் தலைகளால், அவ்வீதிகளும் இடங்களும் நிரம்பியிருந்தன.
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகைதந்த ஒன்றிணைந்த எதிரணியின் ஆதரவாளர்கள், விகாரமகாதேவி பூங்கா, லிப்டன் சுற்றுவட்டம், மருதானைச் சந்தி, மாளிகாவத்தை ஆகிய இடங்களில் ஒன்றுகூடி, கோட்டை, ரயில் நிலையம் மற்றும் அரசமரச் சந்தியை நோக்கி, பல்வேறான வீதிகளின் ஊடாகவும் வருகைதந்தனர்.
எதிர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்படுவதால், அலுவலகங்கள் பலவற்றின் ஊழியர்கள் பலர், தங்களுடைய சொந்த விடுமுறையை எடுத்துக்கொண்டு, நேற்றைய தினம் வீடுகளிலேயே இருந்திருந்தனர். இன்னும் சிலர், 12 மணியுடன் விடுமுறையில் சென்றனர். இன்னும் சில நிறுவனங்கள், தங்களுடைய ஊழியர்களை, நேரகாலத்துடன் வீடுகளுக்கும் தங்குமிடங்களுக்கும் அனுப்பிவைத்துவிட்டன. கொழும்பிலுள்ள பல பாடசாலைகளில் மாணவர்களின் வரவு, நேற்றைய தினம் குறைவாகவே இருந்தன.
அத்தியாவசியத் தேவைகளுக்காக கொழும்புக்கு வந்திருந்தவர்கள், தங்களுடைய கடமைகளை முடித்துக்கொண்டு, அவசர அவசரமாக வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.
அரசாங்கத்துக்கு எதிரான பேரணி எங்கிருந்து ஆரம்பமாகும், எதிர்ப்புக் கூட்டம் எங்கு நடைபெறும் என்பது தொடர்பிலான தகவல்கள், உடனடியாக வெளிவராமையால், கொழும்பின் முக்கிய இடங்களில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, நாடாளுமன்றம் உள்ளிட்ட ஆறு பாதுகாப்பு வலயங்களுக்கு அண்மையிலும், பொலிஸாரின் தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. விசேட அதிரடிப்படையினர் உட்பட மேலதிகப் பொலிஸாரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். பேரணிகளின் பயணத்துக்குத் தடையை ஏற்படுத்தும் வகையில், இரும்புக் கம்பிகளிலான தடுப்புகளும் வீதியோரங்களில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், பேரணியை, புறக்கோட்டை அரச மரச் சந்தியிலிருந்து ஆரம்பித்து, லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் நிறைவுசெய்து, அங்கு, எதிர்ப்புக் கூட்டமொன்றை நடத்துவதற்கான தீர்மானம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், ஒன்றிணைந்த எதிரணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்திலே, நேற்றுப் பிற்பகல் 2 மணியளவிலேயே எடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் பங்கேற்றிருந்தார். மஹிந்த, கோட்டாபய ஆகிய இருவரும், பேரணியில், புறக்கோட்டையில் வைத்து, நேற்று மாலை 4:30 மணியளவில் இணைந்துகொண்டனர்.
இந்தப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து, கலைஞர்கள், தொழிற்சங்கவாதிகள் உள்ளிட்ட துறையினரும், கைகோத்துக் கொண்டனர்.
இந்தப் பேரணியில் பங்கேற்றவர்கள், நேற்றிரவு வரையிலும், லேக்ஹவுஸ் சந்தியிலிருந்து எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பேரணி பயணித்த வீதிகளில் ஆங்காங்கே, பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதேவேளை, ஒன்றிணைந்த எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பிகள், நாடாளுமன்றத்துக்கு நேற்றைய தினம் சமுகமளித்திருக்கவில்லை.
18 minute ago
29 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
29 minute ago
42 minute ago