2025 மே 05, திங்கட்கிழமை

‘ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கவேண்டும்’

Gavitha   / 2020 நவம்பர் 15 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

இஸ்லாமியர்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வது சமயக் கடமை என்பதால், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குவது சம்பந்தமாக அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யும் என்று தான் நம்புவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் , கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

கண்டியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கொரோனா வைரஸால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்வேண்டும் எனும் பிரச்சினை, மார்ச் மாதம் முதல் பேசப்பட்டு வருவதாகவும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இது தொடர்பில் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலம் முழுவதிலும், இந்நாட்டில் வாழும் அனைத்து  மத மக்களுக்கும் மதச் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது என்றும் எனினும், கொரோனா மரணங்கள் தொடர்பாக, முஸ்லிம்களுக்கு அந்த உரிமை வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக சுகாதார பிரிவு அனுமதி வழங்காது என்றே கூறப்படுவதாகக் கூறிய அவர், சீனாவைத் தவிர, உலகில் ஏனைய நாடுகளும் ஐ.நாவும் உலக சுகாதார அமைப்பும் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று தான் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X