Freelancer / 2023 ஒக்டோபர் 09 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தறை நில்வளா கங்கையில் தடுப்பணையில் உள்ள ஒரு பகுதியை மாற்றுவதற்கும் கிளை ஆற்றில் உள்ள தடைகளை அகற்றுவதற்கும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (09) இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மாத்தறை மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் நில்வளா கங்கையில் அமையப்பெற்றுள்ள தடுப்பணையால் தான் இந்த நிலைமை என மக்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தின் போது வெள்ள அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்காக குறுகிய கால மற்றும் நீண்ட கால தொழில்நுட்ப ரீதியில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
இவ்வேளையிலேயே அந்த தடுப்பணையில் ஒரு பகுதியை மாற்றுவதற்கும் அந்த ஆற்றில் உள்ள தடைகளை அகற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொறியியலாளர்களின் மேற்பார்வையின் மூலம், இராணுவம் மற்றும் கடற்படையில் உள்ள அதிகாரிகளின் உதவியுடன் இந்த ஆரம்பக்கட்ட வேலைகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதேபோல எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதிருப்பதற்காக எவ்வாறான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பில் நீர்வழங்கல் அமைச்சும், நீர்ப்பாசனத்துறை அமைச்சும் இணைந்து ஒரு கூட்டு அமைச்சரவை பத்திரத்தை முன்வைக்கவும் கொள்கை ரீதியில் இணக்கம் காணப்பட்டுள்ளது.





3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago