2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஞாயிறன்று கௌரவிப்பு

Freelancer   / 2022 நவம்பர் 10 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

உடப்புஸ்ஸலாவை பிரதேசத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற வானிலையால், ஒத்திவைக்கப்பட்ட கௌரவிப்பு நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெறும் என மணிவேல் சத்தியசீலன் அறிவித்துள்ளார்.

சர்வதேச விளையாட்டு வீரர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 50க்கு மேற்பட்டோர் இந்நிகழ்வில் கௌரவிக்கப்படவுள்ளனர்.

உடப்புஸ்ஸலாவை எமஸ்ட் ஜெட்லைன் விளையாட்டு மைதானத்தில் இந்நிகழ்வு பிற்பகல் 2 மணியளவில் இடம்பெறவுள்ளது என நிகழ்வு ஏற்பாட்டாளரும்,தேசிய,சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கைக்கு பதக்கங்களை வென்றுக்கொடுத்த மணிவேல் சத்தியசீலன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வினையொட்டி நவம்பர் 11,12 மற்றும் 13ஆம் திகதிகளில் கரப்பந்தாட்ட சுற்று போட்டியும் எமஸ்ட் தோட்ட ஜெட்லைன் இளைஞர் கழக விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .