Janu / 2026 ஏப்ரல் 21 , பி.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் பகுதியில் செவ்வாய்க்கிழமை (21) பெய்த கனமழையால் டிக்கோயா, போடைஸ் தோட்ட பகுதியில் உள்ள 50 குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த கடும் மழை காரணமாக, போடைஸ் தோட்ட பகுதியில் உள்ள ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தமையால், அங்கிருந்த மக்கள் தற்காலிகமாகத் தமது உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த வெள்ளப்பெருக்கினால் மக்களின் வீட்டு உபகரணங்கள் மற்றும் உடமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வெள்ளநீர் வடிந்தோடியதையடுத்து மக்கள் தற்போது மீண்டும் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். எனினும், இப்பகுதியில் உள்ள ஆற்றை ஆழப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செ.தி.பெருமாள்


16 minute ago
34 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
34 minute ago
2 hours ago
2 hours ago