Kogilavani / 2021 மே 23 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
வைத்தியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து மூடப்பட்ட டயகம வைத்தியசாலையில், ஒவ்வொரு பிரிவாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, லிந்துலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேகுணரத்ன தெரிவித்தார்.
முதற்கட்டமாக பற்சிகிச்சைப் பிரிவைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வைத்தியருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து அவருடன் தொடர்பைப் பேணிய வைத்தியசாலையின் ஊழியர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் தனிமைப்படுத்தப்பட்டனர்.
எனினும் ஊழியர்களுக்குத் தொற்று உறுதிபடுத்தப்படாததால் வைத்தியசாலை நடவடிக்கைகளைக் கட்டம்கட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
26 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
2 hours ago