R.Maheshwary / 2022 மே 05 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, டயகம - சந்திரிகாமம் தோட்டத்தில் இருந்து, கொழும்புக்கான நடைபயணத்தை ஒருவர் ஆரம்பித்தார்.
சந்திரிகாமம் தோட்டத்தைச் சேர்ந்த 33 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான புஸ்பநாதன் தியாகு என்பவரே, இன்று (5) காலை 08 மணியளவில் தனது, நடை பயணத்தை ஆரம்பித்தார்.
காலிமுகத்திடலில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு வலுசேர்க்கும் , 178 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் பயணத்தினை ஆரம்பித்தார்.
இவரின் நடை பயணம் வெற்றி பெற வேண்டும் என தெரிவித்து தோட்டத்திலுள்ள 150 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் கோவிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியதுடன், தேங்காய் உடைத்து எதிர்ப்பை வெளியிட்டனர்.
அதனைத் தொடர்ந்து தேசிய கொடியை ஏந்தி, தியாகு நடை பயணத்தை ஆரம்பித்தார்.
இவருக்கு ஆதரவு தெரிவித்த தோட்ட மக்கள், டயகம நகரம் வரை பேரணியாக வருகை தந்தனர்.
கொழும்பு நோக்கி பயணம் செய்யும் நபருக்கு ஆதரவாக, நகரத்தில் உள்ள வர்த்தகர்கள் பிரதேச மக்கள் அமோக வரவேற்பு வழங்கினார்கள்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago