Editorial / 2024 ஜனவரி 28 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை- டயகம நகரில் ஞாயிற்றுக்கிழமை (28) பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வைக் கோரி தமிழ் முற்போக்குக் கூட்டணி டயகம நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
நாட்டில் தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் டயகம நகரில் இன்று (28) பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பி.ஏ.பழனி திகாம்பரம், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.உதயகுமார் ஆகியோர் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் கருத்து தெரிவித்த பழனி திகாம்பரம், தோட்ட தொழிலாளி ஒருவரின் நாளாந்த சம்பளத்தை 1,750 ரூபாயாக அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தோட்ட நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கிய போதும் இதுவரை சம்பளம் கிடைக்கவில்லை.
நாட்டின் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த சம்பளம் இரண்டாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டுமென பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் டயகம பிரதேசத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஆதரவாளர்கள் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.




ரஞ்சித் ராஜபக்ஷ
2 hours ago
8 hours ago
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
28 Dec 2025
28 Dec 2025