2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

“டிஜிட்டல் தராசு வேண்டாம்”

R.Maheshwary   / 2022 மார்ச் 09 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா                            

ஹப்புத்தளை- பண்டாரயெலிய தோட்டத் தொழிலாளர்களால் இன்று (9) பணிபகிஸ்கரப்பும் ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

பறிக்கப்படும் கொழுந்தை நிறுவை செய்ய, தோட்ட நிர்வாகம் புதிதாக டிஜிட்டல் தராசைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிபகிஸ்கரிப்பும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த தராசு 4 கிலோகிராம் எடையை குறைத்து காட்டுவதாக தொழிலாளர்கள் தெரிவிப்பதுடன், தொழிலாளர்களின் அடையாள அட்டைப்பதிவும் இத்தராசில் பதியப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

 சுமார் 500 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், “நவீன முறையிலான டிஜிட்டல் தராசு எமக்கு வேண்டாம்“. என்ற கோஷமிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X