R.Maheshwary / 2022 ஏப்ரல் 07 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரை செல்லவிடாமல், வீதியின் குறுக்கே லொறியொன்றை நிறுத்தி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைதசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நோர்வூட் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இச்சம்பவத்தில் 40 மற்றும் 42 வயதான நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டு நேற்று (6) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் இருவரும் எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரை, ஹட்டன்- மஸ்கெலியா பிரதான வீதியில் நோர்வூட் பகுதியில் வீதியின் குறுக்காக டிப்பர் வாகனத்தை நிறுத்தி வழிமறித்துள்ளனர்.
இதன்போது கொட்டகலை எரிபொருள் கூட்டுதாபனத்திலிருந்து 6,000 லீற்றர் டீசல், மஸ்கெலியா பகுதிக்கு செல்லப்பட்டதாகவும், இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட டீசலை நோர்வூட் நகரிலுள்ள எரிபொருள் நிலையத்துக்கு வழங்கினால் வீதிக்கு குறுக்காக நிறுத்தப்பட்டுள்ள லொறியை அப்புறப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்தே மதுபோதையில் இருந்த சந்தேகநபர்கள் நோர்வூட் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
2 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
18 Jan 2026