Freelancer / 2023 நவம்பர் 03 , பி.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.சந்ரு, செ.திவாகரன்
புகையிரதம் வருவதை அவதானிக்காமல் தண்டவாளத்தில் நடந்து சென்ற பெண் ஒருவர் புகையிரதத்தில் மோதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் இன்று பிற்பகல் 1: 30 மணியளவில் பாமஸ்டன் - கிரேட்வெஸ்றன் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது
புகையிரத நிலைய அதிகாரிகள் 1990 ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புகையிரதத்தின் மோதி உயிரிழந்தவர் நானுஓயா உடரதல்ல தோட்டத்தை சேர்ந்த சண்முகம் சந்திரமதி (வயது-40) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து சடலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மரண விசாரணையும் பிரேத பரிசோதனையும் இடம்பெற உள்ளது. R
24 minute ago
53 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
53 minute ago
1 hours ago
3 hours ago