R.Maheshwary / 2022 நவம்பர் 16 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
லிந்துலை- கவுலினா தோட்டத்தில் 2013ஆம் ஆண்டு வீசிய பலத்த காற்றினால் 48 வீடுகளுக்கு சேதமடைந்தன. இந்நிலையில், அவர்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான பணிகள் அப்போதைய அமைச்சர் பழனி திகாம்பரத்தால் முன்னெடுக்கப்பட்டன.
எனினும், அதன் பின்னர் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தால் 48 தனி வீடுகளுக்கான கட்டுமாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
அதன் பின்னர் வந்த புதிய அரசாங்கத்தில் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற ஜீவன் தொண்டமானால் முன்னெடுக்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டாலும் இடைநிறுத்தப்பட்ட வீடமைப்பு திட்டத்தில் எந்தவொரு பணியும் முன்னெடுக்கப்படவில்லை.
இவ்வாறு அமைக்கப்பட்ட தனி வீடுகள் தற்போதும் பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுகின்றன.
அனர்த்தத்தை எதிர்நோக்கி 9 வருடங்கள் கடந்த போதிலும் இன்னும் இம்மக்கள் குடியேற முடியாத சூழ்நிலையில் மிகவும் கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
வீடுகள் அமைக்கப்பட்ட பகுதிகள் காடுகளாக மாறியுள்ளதுடன், அப்பகுதி மக்கள் நடமாட முடியாத இடமாக காணப்படுகின்றது.
எனவே, குறைபாடுகளுடன் காணப்படும் வீடுகளை புனரமைப்பு செய்து கையளிக்குமாறு இத்தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago