Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2020 நவம்பர் 27 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை, தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கம் எடுத்து வருவதாக அந்தச் சங்கம் அறிவித்துள்ளது.
எனவே, நுவரெலியா மாவட்டத்தில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை, பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் அம்மாணவர்களுக்கும் கல்வி நடவடிக்கைகளைத் தொடர வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும், தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பாலசேகரம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் நுவரெலியா மாவட்டத்திலும் திறக்கப்பட்டுள்ளன.
'இருப்பினும் கொரோனா அச்சத்துடன் மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை தருவதுடன் மாணவர்களின் வருகையும் நாளுக்கு நாள் வெகுவாகக் குறைந்தே காணப்படுகிறது.
தலவாக்கலையில் பிரபல பாடசாலை ஒன்றுக்கு, தனிமைப்படுத்தப்பட்டிருந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் வருகை தந்ததால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதனையடுத்து மாணவர்களின் வருகையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
எனவே, தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களில் காணப்படும் பாடசாலை மாணவர்களை தயவுகூர்ந்து பாடசாலைகளுக்கு அனுப்புவதை பெற்றோர்கள் தவிர்த்துக் கொள்ளுமாறு, வினயமாகக் கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago
4 hours ago