Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Gavitha / 2020 நவம்பர் 15 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித்லால் சாந்தஉதய
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும் மக்களின் தொகை குறைவடைந்துள்ளமையால், தனியார் பஸ் துறைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது என, சப்ரகமுவ மாகாண பயணிகள் போக்குவரத்து ஆணையகத்தின் தலைவர் ரம்யகுமார வீரசிங்க தெரிவித்தார்..
9 மாகாணங்களிலும் உள்ள பயணிகள் போக்குவரத்து ஆணையகத்தால், 17 ஆயிரம் முதல் 19ஆயிரம் வரையிலான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்கள் இயங்கமுடியாத சில கிராமப் புறங்களில் சில தனியார்கள்கள் சேவையில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
எனினும், தற்போது கிராமப்புறங்களில் பஸ்களின் பயன்பாடு வெகுவாக சரிந்துவிட்டது என்றும் பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களின் எண்ணிக்கை 75 சதவீதம் சரிந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
பஸ் கட்டணத்தை அரசாங்கம் அதிகித்துவிட்டதாக வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர் என்றும் எனினும், 12 ரூபாயில் இருந்து 15 ரூபாய்க்கு பஸ் கட்டணத்தை அதிகரித்தமை, தற்காலிகமானதே என்பதை, நுகர்வோர் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பஸ்ஸில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்ல முடியாது என்பதால், பஸ் உரிமையாளர்களுக்கு பாரிய இழப்பு ஏற்படுகின்றது என்பதாலேயே, தற்காலிகமாக இந்த பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் கொரோனா வைரஸ் நெருக்கடி நீங்கி, பஸ் சேவைகள் சாதாரண நிலைக்கு இயங்க ஆரம்பிக்கும்போது, பஸ் கட்டணங்க் சாதாரண நிலைக்கு வந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago