2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

தபால் நிலையத்துக்கு அருகில் தேங்கிக் கிடக்கும் கழிவுகள்

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 21 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

ஹட்டன் தபால் நிலைய பிரதான வீதிக்கு அருகில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுற்றாடல் பாதிப்படைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹட்டன் நகரின் M.R. வீதியிலுள்ள தபால் நிலையம் மற்றும் அருகில் உள்ள கடைகளில் இருந்து தினமும் வெளியேற்றப்படும் குப்பைகள் தபால் நிலையத்துக்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் கொட்டப்படுவதனால் அதிக சுற்றாடல் பாதிப்பு ஏற்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஹட்டன் தபால் நிலையத்தில் நாளாந்தம் சேகரிக்கப்படும் குப்பைகள் தபால் நிலைய ஊழியர் ஒருவரினால் எடுத்துச் செல்லப்பட்டு பிரதான வீதியில் அப்புறப்படுத்தப்படுவதாகவும், இது தொடர்பில் தபால் நிலைய அதிபருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் அது தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பிரதேசவாசிகள்  தெரிவிக்கின்றனர்.

மேலும், தபால் நிலையத்திற்கு அருகில் உள்ள கடைகளில் இருந்து தினமும் கொட்டப்படும் குப்பைகள் அந்த இடத்திற்கே கொண்டு செல்லப்படுவதாகவும், ஹட்டன் –டிக்கோயா  நகர சபையின் சுகாதார பிரிவினர் இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளை அகற்றுவதில்லை எனவும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.

இதனால்  ஹட்டன் தபால் நிலையத்துக்கு வருகைத் தருபவர்களும் அவ்வீதியில் பயணிக்கும் பெருமளவிலான மக்களும் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

ஹட்டன் தபால் நிலையத்திற்கு முன்பாக குப்பைகளை கொட்டுவது தொடர்பில் பிரதேசவாசிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தபால் நிலைய அதிகாரி ஒருவரிடம் நாம் வினவியதற்கு பதிலளித்த அவர், தபால் நிலையத்திலிருந்து அகற்றப்படும் எந்தவொரு கழிவுகளும் குறித்த இடத்தில் போடப்படுவதில்லை என்றும்  தபால் நிலையம் அருகில் உள்ள கடைகளிலிருந்து அகற்றப்படும் கழிவுகளே அங்கு தேங்கிக்கிடப்பதாகவும் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .