R.Maheshwary / 2022 ஜூன் 02 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலைவாஞ்ஞன், எஸ்.கணேசன், ரஞ்சித் ராஜபக்ஸ
இலங்கையில் பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழ்நாட்டு அரசாங்கத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அனைத்து மாவட்ட மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கான தமிழக நிவாரணப் பொருட்கள் கொழும்பிலிருந்து ரயிலில், ஹட்டன் ரயில் நிலையத்துக்கு இன்று (2) கொண்டு வரப்பட்டு, உடனடியாகவே விநியோகிக்கும் பணிகள் இடம்பெற்றன.
கொழும்பிலிருந்து ஹட்டன் ரயில் நிலையத்துக்கு 10 கிலோகிராம் அரிசி அடங்கிய 22,350 மூடைகள் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இவை அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவின் 67 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள 23,350 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதனை பகிர்ந்தளிக்கும் விடயங்களில் இதுவரை தமக்கு எவ்வித அரசியல் அழுத்தங்களும் ஏற்படவில்லை என அம்பகமுவ பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.



11 minute ago
22 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
47 minute ago
1 hours ago