2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தமிழரசனின் குடும்பத்துக்கு 4 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது

R.Maheshwary   / 2022 நவம்பர் 03 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசறை- கணவரல்ல தோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தமிழரசன்  கணேச மூர்த்தியின் குடும்பத்தினருக்கு 40 இலட்ச ரூபாய் நஷ்ட ஈட்டு தொகை இன்றைய தினம் வழங்கப்பட்டது.

தமிழரசன் கணேச மூர்த்தியின் அகால மரணம் தொடர்பில்  பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியதோடு பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தாருக்கு நியாயமான இழப்பீட்டுத் தொகை ஒன்று வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் தொழில் அமைச்சரிடம் முன் வைத்தார் .

அதற்கு பதில் அளித்த தொழில் அமைச்சர் மனுஷன நாணயக்கார கூடிய விரைவில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.

அதற்கமைய இன்றைய தினம் உயிரிழந்த தமிழரசன்  கணேச மூர்த்தியின்  குடும்பத்தினருக்கு 4 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .