Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 நவம்பர் 22 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பளை கல்வி வலயத்துக்குட்பட்ட நான்கு பிரதான தமிழ் பாடசாலைகளின் மாணவர்களுக்கிடையிலான வினாவிடைப்போட்டி - 2022 புஸ்ஸலாவை, சரஸ்வதி மத்திய கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்றது.
சரஸ்வதி மத்திய கல்லூரி அதிபர் ஆர்.எஸ். ரவிசந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கோட்டக்கல்விப் பணிப்பாளர் (கம்பளை கல்வி வலயம்) ஆர். உமேஸ்நாதன் அழைக்கப்பட்டிருந்தார்.
கௌரவ அதிதிகளாக கம்பளை சாஹிரா தேசிய கல்லூரி அதிபர் ஏ.எல். சிராஜ், புஸ்ஸலாவை இந்து தேசிய கல்லூரி அதிபர் எஸ். சந்திரமோகன், அயரி தமிழ் மகா வித்தியாலய அதிபர் சீலன் ஆகியோர் பங்கேற்றதுடன், கம்பளை கல்வி வலய உதவிப்பணிப்பாளர் ஜி. கிருஷ்ணபிள்ளை, கம்பளை இந்து கல்லூரி அதிபர் எஸ். ரகு ஆகியோரும் கௌரவ அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்தனர்.
சிறப்பு அதிதிகளாக கம்பளை கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் ஏ.எஸ். எழில்பிரியா, சரஸ்வதியன்ஸ் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளரும், ஊடகவியலாளருமான பா. திருஞானம், சமூக சேவையாளர் எஸ்.வி. பிரசன்னா, சமூக ஆர்வலரும், கைப்பணி கலைஞருமான எஸ். மகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஆரம்பம் முதல் இறுதிவரை மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்ற இப்போட்டியில் பங்கேற்ற மாணவர்களும் தமது திறமைகளை உரிய வகையில் வெளிப்படுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .