2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

தமிழ், சிங்கள மாணவர்களை ஒன்றிணைத்து அறநெறி வகுப்புகள்

Kogilavani   / 2017 ஜூலை 04 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணஸ்ரீ   

தமிழ், சிங்கள மாணவர்களை ஒன்றிணைத்து, அறநெறி வகுப்புகளை நடத்த, சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.  

இதனடிப்படையில், கேகாலை கரடுபன வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தமிழ் மாணவர்களையும் ரம்புக்கனையைச் சேர்ந்த சகோதர மொழி  மாணவர்களையும் ஒன்றிணைத்து, அறநெறி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேற்படி அறநெறி வகுப்பில் கல்விக் கற்கும் தமிழ், சிங்கள மாணவர்களையும் அறநெறி வகுப்பு ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு, கேகாலை அத்தனகொட அலுலேன ரஜமகா விகாரையில் நடைபெற்றது.  

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்து கொண்ட சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி கௌரவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .