R.Maheshwary / 2022 மே 01 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
"உதவினால் இலங்கை மக்கள் அனைவருக்காகவும் உதவுங்கள்; தமிழர்களுக்கென்று தனியே வேண்டாம்" எனும் எமது எல்லோரதும் கோரிக்கை தமிழக அரசுக்கு தெளிவாக சென்று சேர்ந்திருக்கிறது.
கூடவே 'மலையகத் தமிழர்கள்' எனும் சொல்லாட்சியும் புரிதலும் கூட தமிழக அரசியல் தளத்தில் சரியாக புரிந்து கொள்ளப்பட்டதான ஒரு சூழலும் தெரிகிறது. அது சட்ட மன்றத்திலும் ஒலித்து இருக்கிறது. இந்த அசைவுகளுக்குக் காரணமாக இருந்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் முதலில் நன்றிகள் என மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் வழங்கி வைக்கும் தீர்மானத்தை நறைவேற்றியுள்ள தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து அவர் விடுத்தருக்கும் அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்து உள்ளார்.
அந்த அறிக்கையிலே மேலும் தெரிவக்கப்பட்டுள்ளதாவது,
தமது அரசின் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துக்கூறி ஒன்றிய ( மத்திய ) அரசிடம் இதற்கான அனுமதியைக் கோரும் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், இப்போதைய எமது பணி இந்திய மத்திய அரசை தமிழக அரசின் தீர்மானத்துக்கு உரிய அனுமதியை வழங்கி ஒத்துழைக்கக் கோருவதாகும். எனவே மத்திய அரசினைச் சென்று சேரும் வகையில் எமது வேண்டுகோள்களை அனுப்பி வைக்கலாம்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது இலங்கைக்கு உள்ளே இனங்களுக்கு இடையில் மட்டுமல்ல , இலங்கைக்கு வெளியே தமிழ்நாட்டிலும் கூட ஓர் அரசியல் புரிதலை உருவாக்கியிருக்கிறது என்பதனை அவதானிக்க முடிகிறது. இந்த புரிதல் தொடர வேண்டும்.
தமிழ்நாடு அரசு, தமிழக முதல்வர், தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago