2025 ஒக்டோபர் 09, வியாழக்கிழமை

தேயிலை தொழிற்சாலையில் தீ பரவல்

Janu   / 2025 ஒக்டோபர் 09 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மவுஸ்ஸாக்கலை நீர் தேக்கம் அமைப்பால் நீரில் மூழ்கடிக்கப்பட்ட லக்சபான தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு பதிலாக லக்சபான தோட்ட வாழமலை பிரிவில் 1968 ம்  ஆண்டு காலப் பகுதியில் அதி நவீன முறையில் கட்டப்பட்ட தேயிலை தொழிற்சாலை புதன்கிழமை (08) நல்லிரவு சுமார் 12.15 மணியளவில் தீ பற்றி எரிந்துள்ளது.

இச் சம்பவத்தால் ஆயிரம் கோடிக்கு மேல் பெறுமதி வாய்ந்த லக்சபான தோட்ட வாழமலை பிரிவில் அமைக்க பட்ட தேயிலை தொழிற்சாலை நாசமடைந்து உள்ளது.

குறித்த தேயிலை தொழிற்சாலை தீயினால் தேயிலை தொழிற்சாலையில் இயந்திரங்கள் மற்றும் தேயிலை தூள் பொதியிட பட்டு சேமித்து வைக்கும் கலஞ்சியசாலை பாரிய அளவில் எரிந்து உள்ளது எனவும் உயிர் சேதங்கள் இல்லை எனவும் தீயை அணைக்க நல்லதண்ணி பொலிஸார், ரக்காடு கிராமத்தில் உள்ள அதிரடி படையினர், மவுசாக்கலை நீர் தேக்க பகுதியில் உள்ள இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் லக்சபான தோட்ட வாழமலை பிரிவில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா நகரில் உள்ள தீ அணைக்கும் நீர் தாரை படையினர் அதிகாலை வரை போராடி தீயை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த தீ பரவல் குறித்து பல கோணங்களில் புலன் விசாரணை நடத்த நல்லதண்ணி பொலிஸார்  நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X