Janu / 2023 நவம்பர் 02 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையகத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் வழியில் தேநீர் அருந்துவதற்காக நிறுத்தப்படும் ஹோட்டல்களில் தரமற்ற உணவுகள் அதிக விலையில் விற்பனை செய்வதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஹட்டனில் மற்றும் டயகம, நுவரெலியா, தலவாக்கலை, பொகவந்தலாவ, சாமிமலை, மஸ்கெலியா பகுதிகளில் இருந்து கொழும்பு செல்லும் தனியார் மற்றும் அரச பேருந்துகள் தேநீர் அருந்துவதற்காக கித்துல்ஹல, மற்றும் தெஹியோவிற்ற என்ற இரண்டு ஹோட்டல்களில் எதாவது ஒரு ஹோட்டலில் நிறுத்துவது வழக்கமாகும்.
இந்நிலையில், குறிப்பிட்ட இரு ஹோட்டல்களிலும் தரமற்ற உணவுகளே அதிக விலையில் விற்பனை செய்வதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதன்படி, மரக்கரி உணவு 300/=. முதல் 350/=கும் தேநீர் 50/=, பால் தேநீர் 120/=. ஏனைய சிற்றுண்டிகள் 100.120.150 என விற்பனை செய்யப்படுவதாகவும் சாரதி மற்றும் நடத்துனர்களுக்கு விசேட கவனிப்பு கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் நலன் கருதி இவ்வாறு செயல் படுவதைத் தவிர்க்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செ.தி.பெருமாள்

13 minute ago
18 minute ago
25 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
18 minute ago
25 minute ago
54 minute ago