2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

தலவாக்கலையில் ஆர்ப்பாட்டம்

R.Maheshwary   / 2022 மார்ச் 08 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.கணேசன், துவாரக்ஷன்,

  தலவாக்கலை லோகி தோட்ட மல்லிகை பூ சந்தியிலுள்ள மிகவும் பிரசித்திப்பெற்ற வழிப்பிள்ளையார் கோவிலை, தலவாக்கலை கதிரேசன் தேவஸ்தான பரிபாலன சபையிடம் ஒப்படைக்க வேண்டுமெனக் கோரி தலவாக்கலை நகரில் உள்ள   கடைகள் இன்று (8)  அடைக்கப்பட்டு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்   முன்னெடுக்கப்பட்டது.

சுமார் 200 வருடங்கள் பழமை வாய்ந்த குறித்த கோவிலுக்கு அருகிலிருந்த 150 வருடங்கள்  மேல் பழமை வாய்ந்த ஆலமரம் வெட்டப்பட்டதன் காரணமாக, மரத்தின் கிளைகள் விழுந்தமையால்,  மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியர் மீது விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.

அந்த சம்பவம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், அதிகாரிகளை அழைத்து விசாரணைகளை நடத்தி தீர்வுகள் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அறிவுறுத்தியிருந்தார். எனினும், எந்தவொரு நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.

 இந்திநிலையில் தனி நபரொருவர் அந்தக் கோவிலைக் காணியை அபகரித்து, விடுதி ஒன்றினை அமைக்க முற்படுகின்றார்.  இதனால் இப்பிரதேசத்தில் உள்ள மிகவும் பழமைமைவாய்ந்த கோவில் அழியக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன் மரணித்த ஆசிரியர் குடும்பத்திற்கு இதுவரை எவ்வித நிவாரண உதவிகளும் வழங்கப்படவில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலயத்தின் ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில்,மதகுருமார்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X