Editorial / 2022 மார்ச் 06 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்
தலவாக்கலை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சில நாட்களாக நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக தலவாக்கலையிலிருந்து பல தோட்ட பாதைகளுக்கான தனியார் பஸ் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக பஸ் சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தலவாக்கலையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் நீண்ட வரிசையில் இன்றும் (06) காத்திருப்பதை காணமுடிந்தது.
இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை எரிபொருள் நிலையங்களுக்கு அனுப்பப்படும் டீசல், வரிசையில் காத்திருக்குமு் வாகனங்களுக்கு கூட போதாது என்றும், தனியார் பஸ்களுக்கு முன்னுரிமை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தலவாக்கலை நகரிலிருந்து பூண்டுலோயா, இராணிவத்தை, எல்ஜின், டயகம, சென்கூம்ஸ், மடக்கும்புர, மட்டுக்கலை, நோனாவத்தை மற்றும் போபத்தலாவ ஆகிய பகுதிகளுக்கு பயணிக்கும் பொதுப் போக்குவரத்தை நாளாந்தம் பயணம் செய்யும் பெருந்தோட்ட மக்கள் பல்வேறான சிரமங்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.
மலையக தேயிலை தோட்டங்களின் அன்றாட நடவடிக்கைகளும் மரக்கறி போக்குவரத்தும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026