2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

தலவாக்கலையில் நாளை கடையடைப்பு போராட்டம்

R.Maheshwary   / 2022 மார்ச் 07 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுஜிதா

தலவாக்கலை நகர வர்த்தகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நாளை (8) கடைகளை மூடி போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, சுமார் 150 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த தலவாக்கலையின் அடையாளமாக திகழ்ந்த ஆலமரத்தை வெட்டி அகற்றிய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த கடையடைப்பு இடம்பெறவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று  (6)  தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் கோவில் பரிபாலனசபை  ஏற்பாடு செய்திருந்த அவசரக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதன்போது தற்போது தலவாக்கலை பிரதேசத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வரலாற்று  அடையாளத்தை அழிக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற தீர்மானங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன .

மேலும் மரக்கிளை முறிந்து ஆசிரியர் ஒருவர் பலியானமை தொடர்பில், முறையான விசாரணைகளை நடத்துமாறும்  லோகி சந்தியில் அமைந்திருக்கும் வழிப் பிள்ளையார் கோவில் பிரதேசம் பொதுவுடமையாக்கப்பட வேண்டும் போன்ற காரணிகளை வலியுறுத்தி, பொதுமக்கள்  கையொப்பமிட்ட   மகஜர் ஒன்றினை அரச அதிகாரிகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X