2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

தலவாக்கலையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

R.Maheshwary   / 2022 ஏப்ரல் 07 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். சதீஸ்

அரசாங்கத்திற்கு எதிராகவும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (7)  தலவாக்கலை நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் முற்போக்கு கூட்டணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு மலையகத்தின் பல பாகங்களிலும் இருந்து வந்து மக்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு, ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர் கட்சி தலைவருமான சஜித்பிரேமதாச,  தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோகனேசன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம். கூட்டணியின் இனைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுச்சாமி இராதாகிருஸ்ணன், உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X