Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Gavitha / 2020 நவம்பர் 22 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
மலையக மக்களுக்காக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானால் முன்னெடுக்கப்படவிருந்து அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும், ஜீவன் குமாரவேல் தொண்டமான் நிறைவேற்றுவார் என்றும் அதற்கான உதவியையும் ஒத்துழைப்பையும், நாட்டின் தலைவர்களான ஜனாதிபதியும் பிரதமரும் வழங்குவர் என்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
கொட்டகலை கிறிலஸ்பாம், கே.ஜி.கே ஆகிய தோட்டங்களுக்குச் செல்லும் பிரதான வீதிகளை புனரமைப்பு செய்வதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று (22) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது மறைந்த எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமானால், மலையகத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்றும் மேலும் சில திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன என்றும் தெரிவித்தார்.
எனினும், நல்லாட்சி வந்ததும் அரசியல் காரணங்களுக்காக அவை அனைத்தும் இடைநிறுத்தப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
ஆனால் எமக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அனைத்து அபிவிருத்திகளையும் எவ்விதத் தடையும் இன்றி செய்வோம் என்றும் அவர் மேலும் கூறினார்.
“மலையக பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மும்மொழி தேசிய பாடசாலை வரவுள்ளது. அதேபோல, தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாயையும் நிச்சயம் பெற்றுக்கொடுப்போம். அதற்கான சக்தி இருப்பதாலேயே, வரவு - செலவுத் திட்டத்தில் அதற்கான யோசனை முன்மொழியப்பட்டது.
“வடக்கு, கிழக்கு, மலையகம் என தனித்தனியாக வரவு - செலவுத் திட்டங்களை முன்வைக்கமுடியாது. இலங்கை மக்களுக்காகவே வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. மலையக மக்களும் இலங்கையர்களே. எனவே, அவர்கள் பட்ஜட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் எனக்கூறப்படுவதை ஏற்கமுடியாது” என்றும் இதன்போது அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
59 minute ago
3 hours ago