2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தாக்குதலுக்கு இலக்காகி சிறுவன் பலி

R.Maheshwary   / 2022 நவம்பர் 14 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

மாத்தளை- உக்குவளை லேலிஅம்ப பிரதேசத்தில் தாயும் பிள்ளைகள் மூவரும் கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில், 3 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த சிறுவனின் சகோதரர்கள் இருவரும் பாடசாலை செல்ல தயாராகிக்கொண்டிருந்த போது, அவர்களது வீட்டுக்கு வந்த நபர் ஒருவர் இவ்வாறு சிறுவர்களின் தாயையும் பிள்ளைகளையும்  தாக்கி காயப்படுத்தியதாகவும் இதன்போது அவர்களின் தந்தை தொழிலுக்குச் சென்றிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் லேலிஅம்ப பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயது தாயும் 19 வயது மகளும் மற்றுமொரு சிறுவனும் பாரிய காயங்களுடன் மாத்தளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர் மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்பவர் என்றும் தெரியவந்துள்ளதுடன் தாக்குதலுக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .