Editorial / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுதத்.எச்.எம்.ஹேவா, ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன் நகரில் அமைதியற்ற முறையில் செயற்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோவொன்றின் மீது கல்லெறித் தாக்குதல் நடத்தி, இருவரைக் காயப்படுத்திய, யாசகர் ஒருவர் ஹட்டன் பொலிஸாரால் இன்று (02) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவரது தாக்குதலில் பாடசாலை மாணவியொருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மனநிலை பாதிக்கப்பட்டவர் எனச் சந்தேகிக்கப்படும் குறித்த யாசகரைப் பிடிப்பதற்கு பிரதேசவாசிகள் முயன்ற போது, அவர் பள்ளிவாசலுக்குள் சென்று மறைந்துக்கொண்டதாக தெரிவிககப்படுகின்றது.
இதனையடுத்து ஹட்டன் பொலிஸார் யாசகரைக் கைதுசெய்துள்ளனர்.
இதேவேளை, ஹட்டன் நகரில் சில இளைஞர்கள் குறித்த யாசகரை கேலிக்குட்படுத்தும் வகையில் நடத்துவதால், அவ்வாறு நடத்தும் இளைஞர்களை குறித்த யாசகர் கற்களால் தாக்குவாரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அமைதியற்ற முறையில் நடந்துக்கொண்ட குறித்த யாசகரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி, நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவரை அங்கொடை மனநல மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
6 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago