Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 டிசெம்பர் 21 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவி
கம்பளை- தொலஸ்பாகை தாமரவள்ளி தோட்டத்தில் இருந்து ராக்சாவ, பெனிலேன், மாஸ்வல, சுகதகம ,முஸ்வில் ,ஆகிய பிரதேசங்களுக்கும் கம்பளை, நாவலப்பிட்டி, குருந்துவத்தை ஆகிய நகரங்கள் மற்றும் பிரதான வைத்தியசாலைகளுக்கு செல்லும் பிரதான பாலமானது, 20 வருடங்களாக உடைந்துள்ளதுடன், மிகவும் அபாயகரமானதாகவும் காணப்படுகின்றது.
குறித்த பாலம் எந்நேரத்திலும் முழுமையாக உடைந்து விழும் நிலையில் இருப்பதுடன், அந்த அச்சத்தின் மத்தியிலேயே குறித்த பாலம் ஊடாக நாளாந்தம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணிக்கின்றனர்.
குறித்த தோட்டத்திலிருந்து கம்பளை, நாவலப்பிட்டி, குருந்துவத்தை ஆகிய நகரங்கள் மற்றும் பிரதான வைத்தியசாலைகளுக்கு ஏழு கிலோமீற்றர் தூரம் பயணிக்க வேண்டிய நிலையில், இப்பாலம் ஊடாக பயணிக்கும் போது, 1 கிலோமீற்றர் தூரமே பயணிக்கும் வாய்ப்பு கிடைப்பதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இந்த பாலத்தை புனரமைத்து தருமாறு, பல அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் இதுவரை இதனை புனரமைக்க எவரும் நடவடிககை எடுக்கவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த பாலத்தை புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் திட்டங்கள் நல்லாட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்டாலும் அரசாங்கம் மாறியதால் இந்த வேலைத்திட்டம் முழுமையாக கைவிடப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .