2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தாயைப் பிரிந்த சிறுத்தைக் குட்டிகள் தாயிடமே ஒப்படைக்கப்பட்டன

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 13 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இன்ஜஸ்ட்ரி தோட்டத்தில் தாயைப் பிரிந்து தனித்து இருந்த இரண்டு சிறுத்தைக் குட்டிகள் மீண்டும் தாயிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பிறந்து 10 நாட்களே ஆன குறித்த இரண்டு சிறுத்தைக் குட்டிகளும் நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளால் தாயிடம் விடப்பட்டுள்ளன.

கொழுந்து பறிப்பதற்காகச் சென்ற தொழிலாளர்கள் சிறுத்தைக் குட்டிகளைக் கண்டு தோட்ட நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளனர்.

பின்னர் தோட்ட நிர்வாகம் ஊடாக நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த இடத்துக்கு வருகைத் தந்த அதிகாரிகள், குட்டிகள் இரண்டும்  காணப்பட்ட இடத்திலேயே குட்டிகளைப்  பாதுகாப்பாக மீண்டும் வைத்துள்ள நிலையில்,  சிறிது நேரத்தில் தாய் சிறுத்தை அதே இடத்துக்கு குட்டிகளை தேடி வந்து குட்டிகளை எடுத்துச் சென்றதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X