Janu / 2024 ஜூலை 23 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பசறை வெல்கொல்ல பிரதேசத்தில் 10 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் அவரது தந்தை திங்கட்கிழமை (22) இரவு கைது செய்யப்பட்டதாக பசறைபொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான , பதுளை பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றில் அலுவலக உதவியாளராக கடமையாற்றும் 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு மூன்று நாட்களாக , பாதிக்கப்பட்ட சிறுமியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானித்த அவரது தாயார் சிறுமியிடம் விசாரித்த போது , வெள்ளிக்கிழமை (19) அன்று தாய் வயல் வேலைக்கு சென்றிருந்த போது தந்தையால் தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி கூறியுள்ளார் .
இது தொடர்பில் , தாய் பசறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபரான தந்தையை கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி பசறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் , சந்தேக நபரை பசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
5 minute ago
23 minute ago
25 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
23 minute ago
25 minute ago
38 minute ago