R.Maheshwary / 2022 மே 15 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
தியகல -நோட்டன் வீதியில் டெப்லோ என்ற இடத்தில் பாரிய கல் ஒன்று வீதயின் குறுக்கே விழுந்தால் அப்பகுதிக்கான போக்குவரத்து பல மணி நேரம் தடைப்பட்டுள்ளது.
தற்போது மலையகத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, இன்று காலை குறித்த வீதியில் மண் சரிவு ஏற்பட்டதுடன், பாரிய கல் ஒன்று வீதியின் குறுக்கே விழுந்து, வீதியில் பாரிய குழி ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதனால் குறித்த வீதியூடாக கனரக வாகனங்களும் ஏனைய சிறிய வாகனங்களும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் ஓட்டோ, மோட்டார் சைக்கிள்கள் மாத்திரமே மிகுந்த அவதானத்துடன் பயணிக்க கூடியதாக உள்ளது.
தற்போது குறித்த வீதியை சீர் செய்யும் நடவடிக்கை வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago