Editorial / 2024 பெப்ரவரி 08 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் ஆண்ணொருவரை திருமணம் செய்து கொண்டு விசா இன்றி தந்தையுடன் தங்கியிருந்த எத்தியோப்பிய பெண், கண்டி சுற்றுலாத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் இலங்கையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து அம்பிட்டிய பிரதேசத்தில் வசிப்பதாகவும், வெளிநாட்டு பெண், மீண்டும் வெளிநாட்டுக்குச் சென்றுவிடுவாரோ என அஞ்சிய இலங்கையை சேர்ந்த கணவர் பெண்ணின் கடவுச்சீட்டு மற்றும் ஏனைய ஆவணங்களை மறைத்து வைத்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எத்தியோப்பிய பெண் தனது முந்தைய திருமணமான எத்தியோப்பியாவில் தனது இரண்டு குழந்தைகளுடன் இந்த நாட்டிற்கு வந்துள்ளார், மேலும் அவரது விசா ஜனவரி 17 ஆம் திகதி காலாவதியானது, சம்பவம் குறித்து கண்டி சுற்றுலாப் பொலிஸ் பிரிவு இந்தியாவிலுள்ள எத்தியோப்பிய தூதரகத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
ஷேன் செனவிரத்ன
16 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
27 minute ago