Janu / 2024 ஜூலை 22 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊவா பரணகம, ஊமா எல பிரதேசத்தில் உள்ள டயர் களஞ்சியசாலை ஒன்று திடீரென ஏற்பட்ட தீயினால் எரிந்து நாசமாகியுள்ள சம்பவம் திங்கட்கிழமை (22) இடம்பெற்றதாக அம்பகஸ்தோவ பொலிஸார் தெரிவித்தனர் .
களஞ்சியசாலை மூடப்பட்டிருந்த போதே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், பண்டாரவளை நகரசபை தீயணைப்பு பிரிவினர் , அம்பகஸ்தோவ பொலிஸார் மற்றும் ஊவா பரணகம பிரதேச சபையினர் இணைந்து தண்ணீர் பவுசர்களை பயன்படுத்தி தீயை பரவ விடாமல் அணைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் .


20 minute ago
34 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
34 minute ago
2 hours ago
2 hours ago